முற்றத்து பலா

vanchi_anna


அந்த முற்றத்து பலா!
முலைப்பால் தனை ஊட்டி
தாயவள் எமை வளர்த்தது போல்
சுற்றம் அணைத்து
சிறார்கள் கூடி களித்துக் குதிக்க ஆடிக்களித்து விளையாட
நிழலாக, அழகு குடையாக, கற்பக விருட்சயமாக
காட்சி தந்த பேரழகாய்
நின்று நிமிர்ந்து, தின்று சுவைக்க
தினம் ஒரு பழம் தந்த தேன்சுவை பலாமரத்தை
இன்று நினைத்தாலும் இனிக்கிறதே தேனாய் நாவிதனில்!
அன்னையவள் – அந்த மரநிழலில் “அ” எழுதிக்காட்டியதும்
அழுகின்ற பொழுதினிலே
மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி சோறு ஊட்டியதும்
பள்ளியால் சென்று வந்து பசிக்குது என நாம் அழுதால்
பலா பழத்தை வெட்டி தந்து பசி தீத்த நினைவுகளும்
பசு மரத்து ஆணி போல் மனதில் பதிந்து விட்ட நினைவுகளாய்
இதயத்தில் இருந்து ஏன் விடுபட மறுக்கிறது.
ஊரெழு என்ற எங்கள் அழகிய கிராமத்தில் எத்தனை செல்வத்தினை அன்று அறியாமல் அனுபவித்தோம்?
ஊரெழுவான் – Vanchi


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *